இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Monday, June 11, 2012

இன்னுமாடா சங்கத்த கலைக்கல?

ஹலோ இன்னிக்கு அதிகாரி ரொம்ப கோவமா இருக்கேன், பாத்து நிதானமா படிங்க, படிச்சுட்டு சூதானாம இருங்க. ஓகே..?


கடவுள் படச்சதுல மிக அற்பு(த)மான விஷயம் பிரபல பதிவர்கள். (பதிவு எழுதுற எல்லாருமே பிரபலம்தான்) எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல வண்டில ஏறி உக்கார்றது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல இன்னிக்கு எப்படி வேலை செய்யாம ஓப்பி அடிக்கலாம்னு யோசிக்கிறது.


உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி(?) மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள அரைமணி நேரம் டீ பிரேக் போயிடுவாங்க. அடுத்த அரை மணி நேரம் சிகரெட் பிடிக்க கிளம்பிடுவாங்க. சரி சீட்டுக்கு போங்க அப்டின்னு மேனேஜர் சொல்லுவாரு.


அடுத்த அஞ்சி நிமிஷத்துல(அவங்க சீட்டுக்கு வந்து உக்காரும்போதே ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருக்கும்)ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா அப்டின்னு மேனேஜர் கேட்பாரு. அப்போ கேனத்தனமா சிரிப்பாங்க பாருங்க அப்போ வரும் கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்(சீட்டுல வந்தும் வேலை செய்யாம பதிவுகளுக்கு ஓட்டு போடுறது, கமெண்ட்டு போடுறதுன்னு ரெண்டு மணி நேரம் போயிடும்).


அப்புறம் இந்த பதிவு போடுறது இருக்கே, அதவிட கஷ்டமான வேலை எதுவுமே கிடையாது. ஓலபொட்டில ஒண்ணுக்கடிச்ச மாதிரி பதிவு ஒன்ன போட்டுட்டு அதுக்கு கொடுப்பானுங்க பாருங்க லிங்கு. ஃபேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் கமெண்ட்ஸ், ஈமெயில், கூகிள் ப்ளஸ்னு எந்த பக்கம் போனலும் விடாம சுத்தி வளச்சு லிங்க போட்டு பதிவுக்கு கூட்டம் சேர்த்துட்டு போவானுங்க.கூட்டம் சேர்க்க இன்னொரு ஐடியாவும் இருக்கு. காலைல்ல ஆபீஸ்ல வந்து உக்காந்த உடனே வதவதவதன்னு மாடு சாணி போட்ட மாதிரி எல்லா ப்ளாகுகளுக்கும் போய் அருமை, சூப்பர் பதிவுன்னு கமெண்ட்ட போட்டு வெச்சிட்டோம்னா, அதுல பாதியாவது ரிட்டன் வரும். அத வெச்சு அன்னிக்கு பொழப்ப ஓட்டிடலாம். கமெண்ட்ஸ் மட்டும் போதாது, ஓட்டும் போடனும். நீங்கத்தான் போட்டீங்கன்னு யாரு கிளிக் பண்ணி பாக்க போறா, அதுனால அதையும் காமெண்ட்ல சொல்லிட்டோம்னா சோலி முடிஞ்சது. ரிட்டன் ஓட்டு கன்பர்ம்.

ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போயாவது சும்மா இருப்பாங்கன்னா அதான் கெடையாது. வீட்ல போய் லேப்டாப்ப தூக்கிட்டு உக்காந்துட்டு நொச்சு நொச்சுன்னு எல்லா கமெண்ட்டுக்கும் பதில் சொல்றது, விட்டுபோன பதிவுகளுக்கு கமெண்ட்டு ஓட்டு போடுறது, அன்னிக்கு வந்த ஹிட்ஸ் பத்தலேன்னா இன்னும் ரெண்டு பதிவ போடுறதுன்னு வீட்ல இருக்கவங்க உயிர எடுப்பானுங்க.  பக்கத்துல இருக்க சொந்தக்காரன்கிட்ட மூஞ்சி கொடுத்து பேசமாட்டான். எங்கயோ இருக்க பதிவர் எழுதுன வெட்டி பதிவ பாராட்டி ஆஹா அருமைனு ஸ்மைலி போடுவான்.

உலக சினிமா பதிவு எழுதுறவங்க இருக்காங்களே, அவனுங்க பண்ற லந்து இருக்கெ? அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் ஏதாவது வாயில நுழையாத ஒரு இங்கிலீஷ் படம் பேர சொல்ரது, அதுக்கு விமர்சனம்னு என்னத்தையாவது வாந்தி எடுக்கறது, (அதுவும் சிலரு தமிழ் சினிமா பார்க்க மாட்டானுகலாம். ஒன்லி இங்கிலீஷ் படம்தான்) அந்த ஹீரோயின் எவ்ளோ அழகா இருக்கா தெரியுமான்னு கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு பிகரு எப்படி இருந்தா எனக்கு என்ன?

அப்படி என்னடா அந்த நடிகை நடிச்சிருக்கான்னு கேட்டா, வித்தியாசமா நடிச்சிருக்காங்க அப்டின்னு சொல்லுவாங்க. இது நம்ம ஊர்ல இருக்க சாதரண நடிகை கூட வித்தியாசமாத்தான் நடிக்கிறாங்க. அதே மாதிரி வர்ற தமிழ் படத்தை விட்டுட்டு இங்கிலீஷ் படத்தை சத்யம் தியேட்டர்ல Rs.200 கொடுத்து பார்த்துட்டு வந்து வெட்டியா சீன் போடுவானுக. இது உண்மைல சத்யம் தியேட்டர்ல அரையும் குறையுமா வர்ர பிகர்களை வேடிக்க பாக்க போயிருக்கும் ஆனா நம்மகிட்ட என்னமோ அந்த படத்தையே இவர கேட்டுதான் எடுத்த மாதிரி பில்டப் கொடுக்கும்.


இப்படி எப்பவுமே வெட்டியா இருந்துட்டு பதிவர்கள் மீட்டிங்னு வந்த உடனே அங்க போய்  செல்போன்ல எவன்கிட்டயாவது வெட்டியா எதாவது பேசும். "போன வாரம் ஏன் நீ பீச்சுக்கு வரலை?இந்த வாரம் படத்துக்கு போகலாம். சாரிடா செல்லம்." ஏண்டா காலைல இருந்து ஒரு வேலை பார்க்கலை அப்டின்னு வெறும் போன்ல வெட்டி சீன் போடுவானுக.

இந்த திரட்டிகள் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் நல்ல தரமான பதிவுகள் போடுறவங்கள ஊக்குவிக்கனும்னு நினைச்சு ஆரம்பிச்சிருப்பாரு.  ஆன இந்த பன்னாடைங்க அதை அப்படியே திருப்பி விட்டுட்டானுங்க. அவங்க ஏதாச்சும் மிரட்டி கேட்டாங்கன்னா, சார் டீ சாப்டீங்களா. காப்பி சாப்டீங்களா. சிகரெட் வேணுமான்னு வழிய வேண்டியது. இந்த பயம் எல்லாம் இவ்ளோ நாள் எங்கடா போச்சு. இவனுங்களால எந்த திரட்டியவாவது ஓப்பன் பண்ணி நிம்மதியா படிக்க முடியுதா?   நமீதா டவுசர காணோம், குஷ்புவ கிள்ளுனது யாரு, கலா மாஸ்டர் ஆடுனத பாருன்னு போட்டு தாளிக்கிறானுங்க, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா.....

டிஸ்கி : நானும் கேட்கிறேன், இது எல்லாம் ஒரு பொழப்பா. இப்படி எல்லாம் பதிவு போடலைனு யார் அழுதா? ஆபீஸ் வர வேண்டியது. கண்டமேனிக்கு பதிவு போட்டு பொழுத போக்க வேண்டியது. ஏன்டா வேலை செய்யலைன்னு மேனேஜர் கேட்டா அவனை திட்ட வேண்டியது

ஒரிஜினல் டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள பதிவர்கள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் சிலரை தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...