இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Monday, April 30, 2012

மிகச் சிறந்த சிந்தனையாளன்


கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்கு போயிருக்கும்போது ஃப்ரெண்டு ஒருத்தன், ஒரு லேகிய வைத்தியரை பார்க்க சேலம் வரை போகணும் உனக்குத்தானே அவரை நல்லா தெரியும் கூட வா அப்படின்னு கூப்பிட்டன். சரி வெட்டியாத்தான இருக்கோம் அப்டின்னு அவன் கூட போனேன். சேலம் பஸ் நிலையத்தில் இருந்து அந்த வைத்தியர் இடம் வரை போகணும்.

ஊர்ல இருக்கும்போது ஏற்கனவே நிறைய தடவை அங்க போயிருக்கேன். அதனால் எனக்கு அந்த இடம் தெரியும். அங்க போற பஸ் ஏறினோம். சரியான கூட்டம். எல்லாம் கிழவனுங்க கூட்டம். அவனுங்களும் அங்கதான் போறானுங்க போலன்னு நெனச்சிகிட்டேன். அப்புறம் ஒரு ஸ்டாப்பில்  கூட்டம் குறைந்தது பின் சீட்டில் ஃப்ரெண்டும் அதற்ககு முந்தைய சீட்டில் நானும் உக்கார்ந்தோம்.


ரோட் சைடுல ஏதோ பிட்டுப்பட விளம்பரத்துன "ஷக்கீலா" சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்களை ரசிச்சிக்கிட்டே (ஜொள்ளு விட்டுகிட்டேன்னு சொல்லு) இறங்குற இடத்தை மறந்துட்டேன் (ஹிஹி). ஃப்ரெண்டு இறங்கும்போது சிப்பு சிப்பு னு கூப்பிட்டிருக்கான்.




ஆனா நான் ஷக்கீலா போட்டோ பாக்குறதுல ரொம்ப பிஸி. அதனால அவன் கூப்பிட்டதை கவனிக்கலை. பஸ்ல உள்ள ரெண்டு பேர் கூட யாருப்பா சிப்பு சிப்புன்னு கேட்டிருக்காங்க. நான் அதை கண்டுக்கவே இல்லை. அதுக்கப்புறம் ஃப்ரெண்டு கீழ இறங்கி போன் பண்ணி சொன்ன  பிறகுதான் கவனிச்சேன் (ஹிஹி).

அதுக்கப்புறம் ரன்னிங்ல  இறங்க போகும்போது ஒருத்தர் கேட்டார் "நீங்கதான் சிப்பா"?  நான் ஆமான்னு சொன்னேன். அதுக்கு அந்த பெரியவர் எனக்கு கொடுத்த பட்டம் "நீ மிகப்பெரிய சிந்தனையாளன்" . இவ்ளோ பேர் கூப்பிட்டும் கவனிக்கலைன்னா ஏதோ ஒரு பெரிய(?) விஷயம் பத்தி சிந்திச்சிருக்க. "கீப் இட் அப் (?)" அப்டின்னு சொன்னார். இப்போ ஜொள்ளுங்க சீ சொல்லுங்க நான்  மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? ஷக்கீலாவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் ஷக்கீலா... அண்ட் தேங்க்ஸ் பிட்டுபடம்
ஒரிஜினல் : மிகச் சிறந்த சிந்தனையாளன்

Wednesday, April 18, 2012

உஷாரா இருக்கணும்!!!

பிறந்தோம் வளர்ந்தோம்னு இருந்து என்ன பிரயோஜனம். வாழும் வாழ்க்கைல நாலு பேருக்கு கெட்டது பண்ணணும்ல (என்னது என் பிளாக் படிக்கசொல்ல போறேனா....? நோ நெவெர், கொலகேஸ்ல உள்ள போக நான் தயார் இல்ல......). அதான் மக்களுக்கு சில பயனுள்ள தகவல்கள் சொல்லி அவங்களை உஷார் படுத்தலாம் அப்டின்னு இந்த பதிவை எழுதுறேன். ஏதோ என்னால முடிஞ்சது.

உடம்பு நல்லா இருந்தா --உடனே போய் டாக்டர் விஜய் படம் பார்க்கனும்

ஆம்புலன்சுக்கு 108க்கு போன் பண்ணவும் - (+91*****க்கு தவறாக போன் செய்து நாய்நக்சிடம் மாட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது)

சாமி கும்பிட - கோவிலுக்கு போகணும் (நோ நோ இன்னிக்கு நான் ரொம்ப பிஸி. தேங்கா பொறுக்கித்தர மாட்டேன்)

துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும் (என்னைய மாதிரி அடுத்தவன் வீட்டு கொடில எடுக்க கூடாது) 

படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும் (விருதகிரி பாருங்க. மேதை பாருங்க, சும்மா ஒரு விளம்பரம். ஹிஹி)

நல்ல பதிவுகள் படிக்க - என்ன யோசனை. யோசிக்காம என் பிளாக் வாங்க (யோசிச்சா வர முடியாதில்ல. இல்லன்னா டெரர்பாண்டியன் கள்ளிக்காட்டு இதிகாசம்-Season 3 எழுதுறாரு. அதை படிங்க)

வீட்டுல களவு போனா - போலீஸ் ஸ்டேஷன் போகணும் (என்னை மாதிரி சிரிப்பு போலீஸ் இருக்குற போலீஸ் ஸ்டேஷன் போகணும், அப்போதான் உங்களுக்கு களவு போன சோகமெல்லாம் பறந்து போயிடும்)

கரண்ட் இல்லைன்னா - EB Office க்கு போன் பண்ணனும் (என்னைய மாதிரி நீங்களே ட்யூப்லைட்டா இருந்தா அதுவும் தேவை இல்லை)

டிஸ்கி 1: தலைப்பில் உள்ளது போல "உஷாரா இருக்கணும்". உஷாவோட இருக்கணும்னு தப்பா புரிஞ்சிகிட்டு ட்ரை பண்ணி என்னைய மாதிரி அடி வாங்கிடாதீங்க அப்புறம் அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.


அவனுங்க இந்த மொக்க பதிவ படிச்சு சாகட்டும், நாம அந்த ரூமுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கலாம் வா....


இதன் ஒரிஜினலை பார்க்க: உஷாரா இருக்கணும்!!!

Tuesday, April 17, 2012

இந்தியாவில் தமிழன் தலைநிமிர வழி என்ன?

பொதுமக்கள் அனைவருக்கும் இந்த ஏட்டு ஏகாம்பரத்தோட (என்கவுண்ட்டர் பெசலிஸ்ட்) பணிவான வணக்கம். ஏதோ காசு கொடுத்து போஸ்டிங் வாங்கி அப்பப்ப, அங்கங்க அஞ்சு பத்துன்னு வாங்குனாலும் எனக்கும் மக்கள் முன்னேற்றத்துல அக்கறை இருக்குன்னு இன்னிக்கு நிரூபிக்க போறேன்.



அதாவது சார், இன்னிக்கு நாட்ல என்ன பிரச்சனை இருக்குன்னா, அந்த பக்கம் காவேரி, இந்த பக்கம் முல்லை பெரியார், இன்னொரு பக்கம் பாலாறு அடுத்த பக்கம் ஈழம். இப்படி திரும்புன பக்கமெல்லாம் தமிழனுக்கு அடி, ஒருபய மதிக்க மாட்டேங்கிறான். அதுக்கு என்ன காரணம் அதை எப்படி சரி பண்றதுன்னு இன்னிக்கு ஒரு தீர்வோட வந்திருக்கேன். அதை கேட்டுட்டு நீங்கள்லாம் அப்படியே ஷாக் ஆகிடுவீங்கன்னா பாருங்களேன்.

நாட்டுல அதிகாரம் வாய்ந்த ஆள் யார்? பிரதமர்தானே? அப்போ அவர் ஆபீஸ்தானே அதிகாரம் வாய்ந்த இடம்? இங்கதான் நீங்க கவனமா இருக்கனும். பிரதமர் ஆபீஸ் எங்க இருக்கு? டெல்லிலதானே? டெல்லி எங்க இருக்கு? இன்னும் டீட்டெயிலா பார்ப்போமா? ஒரு இண்டியா மேப்ப எடுத்து ஓப்பன் பண்ணி வெச்சுக்குங்க சார். அப்புறம் ஒரு அடிஸ்கேல் ஒண்ணு எடுத்துட்டு நான் சொல்றத கவனமா கேளுங்க.

தமிழ்நாட்டோட செண்டர்ல ஸ்கேலோட ஒரு பக்கத்த வெச்சிக்கிட்டு, அப்படியே டெல்லி வரைக்கும் அளந்து பாருங்க. அடேங்கப்பா எவ்வளது தூரம்? இவ்வளவு தூரத்துல அதிகார மையம் இருந்தா நம்மளை எவன் மதிப்பான்? இப்போ புரியுதா சார் என்ன பிரச்சனைன்னு? இனி இதை எப்படி சரி பண்றதுன்னு பார்ப்போம்.





வெயிட் வெயிட்... நீங்கள்லாம் அந்தப்படத்துல வந்த மாதிரி தமிழ்நாட்ட அப்படியே தூக்கி டெல்லி பக்கத்துல வைக்க சொல்ல போறேன்னு தானே நினைக்கிறீங்க? தப்பு, ஒருத்தன் எத்தன தடவ சார் தப்பு பண்ணுவான்? அப்போ ஏதோ சின்ன வயசு, அவசரத்துல தப்பா ஐடியா சொல்லிட்டேன். இனி அப்படி நடக்காது சார். இவ்ளோ சின்ன டெல்லிய தூக்கிட்டு வந்து தமிழ்நாட்டுல வைக்கிறத விட்டுட்டு, இம்மாம்பெரிய தமிழ்நாட்ட தூக்கி டெல்லி பக்கத்துல வைக்க சொல்வேனா?

அதுனால டெல்லிய அப்படியே ரிமூவ் பண்ணி தமிழ்நாட்டுல நல்லா செண்ட்ட்ரான எடமா பாத்து வெச்சிவிடுங்க. வேல முடிஞ்சது. (அப்பிடியே டெல்லிய நகட்டிட்டு வரும்போது நமக்கு பிரச்சனையா இருக்க கர்னாடகாவ லேசா அப்பிடி கடலுக்குள்ள தள்ளி விட்டோம்னா...  அந்த பிராப்ளமும் சால்வ்ட்... எப்பிடி  என் ஐடியா...?) இப்படியே எல்லாரும் அவங்கவங்க மேப்ப எடுத்து மாத்தி முடிச்சிட்டீங்கன்னா, இனி டோட்டல் அதிகாரம் நம்ம கைக்கு வந்திடும்ல? 

பார்த்தீங்களா ஒரு உயர் அதிகாரி, எவ்ளோ பொறுமையா உக்கார்ந்து ஒரு பெரிய தீர்வு ஒன்னு சொல்லி இருக்கேன், அதுனால என்னுடைய இந்த தீர்வு குறித்து ஆன்றோர்கள், சான்றோர்கள், பெரியோர்கள், சபையோர்கள், முன்னோர்கள் அனைவரும் கருத்து கூறுமாறு கேட்டுகொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

Tuesday, April 10, 2012

மலரும் நினைவுகள் -கூவக்கரையோரம்

குவார்ட்டரு உள்ள போயிட்டா அப்புறம் மலரும் நினைவுகளே தானே...?
நான் சின்ன வயசா இருக்கும் போது அடிக்கடி கூவத்துல போய் விளையாடுவேம், ஏன்னா அந்த வாசம்தான் எனக்கு ரெம்ப புடிச்சிருந்துச்சு. எல்லா நேரத்துலேயும் நேரத்துல கூவத்துல அதிகமா தண்ணி ஓடாது. அதுனால ஒவ்வொரு வீட்டுக்கும்(இல்லை ரெண்டு மூணு வீட்டுக்கரங்களுக்கு சேர்த்து) சொந்தமா கூவத்துல இருந்து கால்வாய்  தோண்டி வச்சிருப்பாங்க. அதுல வேற யாராவது தண்ணி எடுத்திட கூடாதுன்னு பழைய பிஞ்ச செருப்ப அங்க போட்டு வச்சிருப்பாங்க. சில நேரம் தண்ணி கடன் கேட்டும் வருவாங்க. மழை நேரத்தில் மட்டும் கூவம் நிறைய தண்ணி ஓடும். கூவம் கரையில நின்னு தண்ணி எடுத்திட்டு வரணும்.

கால்வாயிலும்  தண்ணி இருக்குறது கஷ்டம்தான். அஞ்சு குடம் தண்ணி எடுத்துட்டா அப்புறம் தண்ணி கூவத்துல இருந்து வடிஞ்சி வர்ற   வரைக்கும் காத்திருக்கணும். மாசம் ஒரு தடவை அந்த கால்வாய தூர் வாரணும். அப்பத்தான் தண்ணி நல்லா ஊரும். யாராவது இறங்கி உள்ள இருக்குற சாக்கடைய அள்ளி வெளியில் கொட்டுவாங்க. அப்புறம் அந்த தண்ணியை அப்படியே குடிக்க முடியாது.  பால்டாயில்னு ஒண்ணு இருக்கும். அதை அடுப்புல போட்டு சுட வச்சு நாம பிடிச்சு வச்சிருக்குற தண்ணில கரைக்கணும். அப்போத்தான் தண்ணி குடிக்கிற நிலைமைக்கு வரும். யாராவது குடிக்க போகும்போது குடத்துக்குள்ள கைய விட்டு கலக்கிடுவோம். கைலதேங்கி இருக்குற அழுக்கெல்லாம் கரைஞ்சு மறுபடியும் தண்ணி பழைய கலராயிடும். இதுக்கே பயங்கர சண்டை நடக்கும்.

எல்லாரும் தண்ணி எடுத்துட்டு போற அழகே அழகுதான். தலையில ஒரு பானை அல்லது குடம் இருக்கும்(பிளாஸ்டிக் குடம் இல்லை. எவர்சில்வர் குடம். வெறும் பானையே கொஞ்சம் வெயிட்டாத்தான் இருக்கும்.. ஏன்னா.. நாங்க திருடிட்டு போய்  எடைக்கு போடும்போது தெரிஞ்சிகிட்டோம்! )  இடுப்புல அல்லது கையில் ஒரு குடம். அங்க வச்சிட்டு வந்தாதான் நாங்க தூக்கிட்டு  போயிருவோம்னு பயம்தான்! 

அப்புறம் கொஞ்ச நாள் ஆனதும் சைக்கிள் வாங்கி கொடுத்தாங்க. பிறகு நான் சைக்கிள்ள அடகு வச்சிட்டு போயி தண்ணி அடிச்சிட்டு வருவேன். பின்னாடி உள்ள கேரியல மட்டும் கலட்டி வித்து ரெண்டு  குவாட்டராவது   அடிச்சிருவேன். சில பேர் சைக்கிள் ட்யூபை மட்டும் கலட்டி வித்து  மூணு  குவாட்டர்  கூட ஒரே நேரத்துல அடிப்பாங்க. அதுக்கும் போட்டிதான். யார் அதிகமா அடிக்கிறாங்கன்னு. சில நேரம் அடுத்தவன் குவாட்டரை  எட்டி உதைச்சு சண்டையான கதையும் உண்டு. 

 

அப்புறம் கூவம் கரைதான் பொழுதுபோற இடம். அங்க நைட்டாகிட்டா பலான பலான மேட்டருங்க நடக்கும். எல்லாத்தையும் சிகரெட்ட பத்த வெச்சு அந்த வெளிச்சத்துலயே திருட்டுத்தனமா பார்ப்போம். அங்க மீந்து போன சாராயம், கஞ்சா, சுண்டக்கஞ்சின்னு கெடைகும். ஆள் இல்லாத நேரமா பாத்து எடுத்து அடிப்போம்.  அங்க குட்டைக்கு பக்கத்துல உடைச்சு கிடக்குற பிளேடு வச்சிதான் முடிவெட்டுறது,ஷேவிங் பண்றது எல்லாம் நாங்களே மாத்தி மாத்தி பண்ணிக்குவோம்.
மழை காலத்தில்தான் கூவத்தில் தண்ணி அதிகமாக வரும். குப்பத்தில் உள்ள எல்லோரும் அழுக்கு துணிகளை எடுத்துட்டு(அதோட பிஞ்ச பாய்,கிழிஞ்ச பெட்ஷீட் எல்லாம்) கூவத்துக்கு துவைச்சு குளிக்க கிளம்பிடுவாங்க. நாங்களும் நீச்சல் அடிக்க போறோம்ன்னு சொல்லி அங்க போயி தண்ணில விளையாண்டு அங்க குளிக்கிற பொண்ணுங்கள்ட்ட வம்பு பண்ணி  சிலநேரம் செருப்படி வாங்கிருக்கோம். 

 
என்னா அடி..... போயிட்டாளுங்களா...?


டிஸ்கி - பார்த்தீங்களா மக்களே? நான் ஒன்னும் அந்த டுபாக்கூர் சிரிப்பு போலிஸ் மாதிரி இன்னைக்கு இந்தியாவுல புதன் கிழமை போய் வேலைய பாருங்கன்னு சொல்ல மாட்டேன்! உங்கள் திருப்தியே எனது மாமூல்.. ச்சே.. எனது சேவை!

நன்றி ஒரிஜினல் மலரும் நினைவுகள் கம்மாய்

Monday, April 9, 2012

நூத்துக்கு நூறு


இதெல்லாம் எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி... யாருகிட்ட......?

நேத்து ஏட்டு கருப்சாமி மற்றும் கோயிந்து சாமி கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். ரெண்டு பேரும் நூறாவது பதிவு என்ன போட போறீங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க. நான் நூறாவது பதிவு எப்ப போடுறது அப்டின்னு கேட்டேன். அவங்க சொன்ன விஷயத்தை கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

ஆமாங்க நூறாவது பதிவு போடுறதுக்கு முன்னால 99-வது பதிவை கண்டிப்பா போட்டிருக்கனுமாம்.(என்ன ஒரு கண்டுபிடிப்பு). எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரமிச்சிடுச்சு. ஏன்னா நான் 5 பதிவுதான் போட்டிருந்தேன். அப்டின்னா எப்படி நூறாவது பதிவ போடுறதுன்னு நானும் உயர் அதிகாரிகள் கிட்ட ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தேன் (இதுக்கு பேசாம வழக்கம் போல படுத்து தூங்கிருக்கலாம்).

நூறாவது பதிவுன்னா வித்தியாசமா இருக்கனுமாம்(அப்டின்னா ஹிந்தில எழுதிடவா?). ஒரு கருத்து இருக்கனுமாம்(பதிவ படிச்சிட்டு உயிரோட இருந்தா பாக்கலாம்).

கடைசில ஒரு வழியா நேத்து 99-வது மொக்கை பதிவை போடுற மாதிரி கனவு கண்டேன். அப்புறம் நூறுதான?(நான் கரெக்டாதான பேசுறேன்). சரி நூறாவதா என்ன பதிவு போடலாம். அதை உங்க சாய்ஸ்-கே விட்டுடுறேன்(நீ பதிவே எழுத வேண்டாம் அப்டின்னு யாராவது கமெண்ட் போட்டீங்க நம்ம ஒரிஜினல் சிரிப்பு போலீச திரும்ப பதிவு எழுத கூட்டிட்டு வந்திருவேன், ஜாக்கிரதை)

நேத்து 99-வது பதிவு போடுற மாதிரி கனவு காணும் போது 1121 Followers இருந்தாங்க. ஆனா இன்னிக்கு 21 Followers தான் இருக்காங்க. மீதி பேரக் காணோம். இதுக்கு ஏதோ உள்நாட்டு சதிதான் காரணம்ன்னு நினைக்கிறேன். என்ன பண்ணியாவது அந்த சதியை கண்டு  பிடிக்கிறேன். போலீஸ்னா சும்மாவா!!!

என்னோட இந்த நூறாவது பதிவை முன்னிட்டு எல்லோரும் அவங்க அவங்க வீட்டு பக்கத்துல உள்ள ஸ்வீட் கடைக்கு போய் உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்டை வாங்கி சாபிடுங்க. அதுக்கு காசு வேணும்னா இந்த அட்ரஸ்ல காண்டக்ட் பண்ணுங்க:

சிரிப்பு போலீஸ் (உண்மையிலேயே ஒரிஜினல்)
சென்னை மெயின் ரோடு,
சென்னை குறுக்கு சந்து,
டாஸ்மாக் மேல் மாடியில்,
சென்னை

நன்றி: ஒரிஜினல் நூத்துக்கு நூறு

.

Tuesday, April 3, 2012

ஏப்ரல் மாதம் - மலரும் நினைவுகள்!



எப்படி இருந்த நான்.............




இப்படி ஆகிட்டேன்.........


ஏப்ரல்  மாதம் ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் மாதம் என்றாலே கடுமையான வெய்யல், வியர்வை, வியர்க்குரு  எல்லாம் நியாபகத்துக்கு வருகிறது.

சின்ன வயதில் ஊரில் உள்ள பெண்கள் எல்லோரும் முதல் நாள் இரவே நாளைக்கு குளிக்கலாமா வேண்டாமான்னு கூடி பேசுவாங்க. வீட்ல நானும் குளிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சு உதை வாங்கிய  கதையெல்லாம் நியாபகத்திற்கு வருகிறது. 

காலை நாலு மணிக்கெல்லாம் எங்க ஊர் கோவில்ல பொங்கலுக்கு அடுப்பு மூட்டிருவாங்க. ஏப்ரல் மாதம் தவிர மத்த மாதம் கோவில்ல பொங்கல் போடுறதில்லை. அந்த அதிகாலை வெக்கைல வியர்வையோட பொங்கலுக்கு அலையுற பீலிங்கே தனி. 

சில நேரம் நண்பர்கள் சேர்ந்துவிட்டால் எங்கள் வீடு மட்டுமல்லாமல் அந்த வெக்கையிலும்  எல்லோர் வீட்டு வாசலுக்கும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு ஒவ்வொரு வீட்லயும் காப்பி கேட்டு பக்கத்து வீட்டு அக்காக்களிடம் திட்டு வாங்கி வந்த அனுபவமும் உண்டு. 

எல்லார் வீட்லயும் கோலம் போட்டு முடிந்ததும் கொஞ்சூண்டு அரிசியை எறும்புகளுக்காக  கோலத்துக்கு நடுவில் வைத்து அதன் நடுவில்   சாணி புள்ளையார் வைத்து பூசணிப்பூ சொருவி வைப்பார்கள். மாட்டுச்சாணியில் விதவிதமான பிள்ளையார்கள் செய்து வைப்பார்கள். நாங்கள் விட மாட்டோமே... சாணிக்கு நடுவில் உள்ள அரிசியையும் பொறுக்கித்  தின்று விடுவோம்! அரிசியில் இருந்து சாணியை கிளீன் பண்ணுவது  நான்தான்.

கோடை விடுமுறைக்காக புண்ணாக்கு  திங்கும்  போட்டி எல்லாம் நடக்கும். அப்போ எல்லாம் விடிய விடிய புண்ணாக்கு திம்போம். யாருக்கும் தொண்டை அடைக்க  கூடாதுன்னு ஒவ்வொரு வீட்லயும் வாசல்ல அண்டா வச்சு அதுல புண்ணாக்க கலந்து விட்டிடுவாங்க. எப்படியும் நாற்ப்பது கிலோ புண்ணாக்கு  ஓடும். பக்கத்து வீட்டுக்காரங்க வந்து "தம்பி.. எங்க வீட்ல புண்ணாக்கு தீர்ந்துருச்சுன்னு சொன்னா கிடைக்கிற சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

ஆனா இப்பெல்லாம் இந்த அனுபவம் கிடைக்கிறதே இல்லை. அந்தந்த வீட்ல உள்ள நாதாரிங்களே எல்லாப் புண்ணாக்கையும் தின்னுட்டு  படுத்து தூங்கிடுராங்க. காலைல பருத்திக்கொட்டையாம்! காலைல  புண்ணாக்கு தின்னா தொண்டை அடைக்குதாம்! சில நல்ல அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறோம்.

டிஸ்கி: இன்று காலை நாலு மணிக்கு எங்க வீட்டு பக்கத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் புண்ணாக்கு போட்டதால் சீக்கிரம் எழுந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்து இன்று மிக நல்ல பீலிங்...