இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Tuesday, April 3, 2012

ஏப்ரல் மாதம் - மலரும் நினைவுகள்!



எப்படி இருந்த நான்.............




இப்படி ஆகிட்டேன்.........


ஏப்ரல்  மாதம் ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் மாதம் என்றாலே கடுமையான வெய்யல், வியர்வை, வியர்க்குரு  எல்லாம் நியாபகத்துக்கு வருகிறது.

சின்ன வயதில் ஊரில் உள்ள பெண்கள் எல்லோரும் முதல் நாள் இரவே நாளைக்கு குளிக்கலாமா வேண்டாமான்னு கூடி பேசுவாங்க. வீட்ல நானும் குளிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சு உதை வாங்கிய  கதையெல்லாம் நியாபகத்திற்கு வருகிறது. 

காலை நாலு மணிக்கெல்லாம் எங்க ஊர் கோவில்ல பொங்கலுக்கு அடுப்பு மூட்டிருவாங்க. ஏப்ரல் மாதம் தவிர மத்த மாதம் கோவில்ல பொங்கல் போடுறதில்லை. அந்த அதிகாலை வெக்கைல வியர்வையோட பொங்கலுக்கு அலையுற பீலிங்கே தனி. 

சில நேரம் நண்பர்கள் சேர்ந்துவிட்டால் எங்கள் வீடு மட்டுமல்லாமல் அந்த வெக்கையிலும்  எல்லோர் வீட்டு வாசலுக்கும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு ஒவ்வொரு வீட்லயும் காப்பி கேட்டு பக்கத்து வீட்டு அக்காக்களிடம் திட்டு வாங்கி வந்த அனுபவமும் உண்டு. 

எல்லார் வீட்லயும் கோலம் போட்டு முடிந்ததும் கொஞ்சூண்டு அரிசியை எறும்புகளுக்காக  கோலத்துக்கு நடுவில் வைத்து அதன் நடுவில்   சாணி புள்ளையார் வைத்து பூசணிப்பூ சொருவி வைப்பார்கள். மாட்டுச்சாணியில் விதவிதமான பிள்ளையார்கள் செய்து வைப்பார்கள். நாங்கள் விட மாட்டோமே... சாணிக்கு நடுவில் உள்ள அரிசியையும் பொறுக்கித்  தின்று விடுவோம்! அரிசியில் இருந்து சாணியை கிளீன் பண்ணுவது  நான்தான்.

கோடை விடுமுறைக்காக புண்ணாக்கு  திங்கும்  போட்டி எல்லாம் நடக்கும். அப்போ எல்லாம் விடிய விடிய புண்ணாக்கு திம்போம். யாருக்கும் தொண்டை அடைக்க  கூடாதுன்னு ஒவ்வொரு வீட்லயும் வாசல்ல அண்டா வச்சு அதுல புண்ணாக்க கலந்து விட்டிடுவாங்க. எப்படியும் நாற்ப்பது கிலோ புண்ணாக்கு  ஓடும். பக்கத்து வீட்டுக்காரங்க வந்து "தம்பி.. எங்க வீட்ல புண்ணாக்கு தீர்ந்துருச்சுன்னு சொன்னா கிடைக்கிற சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

ஆனா இப்பெல்லாம் இந்த அனுபவம் கிடைக்கிறதே இல்லை. அந்தந்த வீட்ல உள்ள நாதாரிங்களே எல்லாப் புண்ணாக்கையும் தின்னுட்டு  படுத்து தூங்கிடுராங்க. காலைல பருத்திக்கொட்டையாம்! காலைல  புண்ணாக்கு தின்னா தொண்டை அடைக்குதாம்! சில நல்ல அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறோம்.

டிஸ்கி: இன்று காலை நாலு மணிக்கு எங்க வீட்டு பக்கத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் புண்ணாக்கு போட்டதால் சீக்கிரம் எழுந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்து இன்று மிக நல்ல பீலிங்...

18 comments:

நாய் நக்ஸ் said...

Sethaan....sekaruuuuu.....

Ithukkuthaan...
Blog-i open
panna koodaathu-nu
sollurathu.....

Intha post....
MANAPONNUKKU
mooi....thaane....????????

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

அண்ணே நாய்நக்ஸ் அண்ணே, இப்படி இங்கிலீசுல கன்னாபின்னான்னு என்னைய பாராட்டி கவித எழுதி இருக்கீங்க, நான் அத கூட படிக்க தெரியாதவனா போயிட்டேனேண்ணே...

செல்வா said...

// "தம்பி.. எங்க வீட்ல புண்ணாக்கு தீர்ந்துருச்சுன்னு சொன்னா கிடைக்கிற சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.//

நவீன உலகத்தில் புண்ணாக்குத் திண்ணும் போட்டி என்பது கனவாகிப் போனது வருந்தத்தக்கதே. மத்திய அரசும், தமிழக அரசும் அழிந்து வரும் இந்தக் கலையை பேணிக் காத்திட இயைந்த உதவிகளை நல்க வேண்டுமென்பது நமது அவா..

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

தம்பி, இப்படி எதுக்கு இப்படி பேசி பழகுற? அண்ணனுக்கு இதெல்லாம் புரியாதுன்னு தெரிஞ்சும் வெந்த புண்ல வேல பாய்ச்சுரியே?

செல்வா said...

தங்களுக்குப் புரியாவிட்டாலும் இந்த உலக மக்கள் இதைப் படித்தாவது புண்ணாக்குத் தின்னும் கலையின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கத்தில் அவ்வாறு எழுத வேண்டியவனாகி காலத்தின் முன்னால் கைகட்டி நிற்க வேண்டியதாகிப் போனதை நினைக்கும் போது என் நெஞ்சம் குமுறுகிறது.

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

தங்கள் நெஞ்சம் குமுறுவதை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. இன்னும் வேறு என்னென்ன குமுறுமோ?

செல்வா said...

ஒரு பெரிய ஆபீசர் இதற்கெல்லாமா பயப்படுவது ?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

தம்பி இப்ப எதுக்கு அத இழுக்குற? எனக்கு பாம்புன்னா பயம். பாம்ப பாத்தா படையே நடுங்கும் போது கேவலம் ஒரு அதிகாரி என்னால என்ன செய்ய முடியும்?

Anonymous said...

oh my god...

வைகை said...

இது சரியான புண்ணாக்கு போலீசா இருக்கும் போலயே? :-)

வைகை said...

படையே நடுங்கும் போது கேவலம் ஒரு அதிகாரி என்னால என்ன செய்ய முடியும்?///

கேவலம் ஒரு அதிகாரி இல்லை.... நீ ஒரு கேவலமான அதிகாரி :-)

வைகை said...

இன்று காலை நாலு மணிக்கு எங்க வீட்டு பக்கத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் புண்ணாக்கு போட்டதால் சீக்கிரம் எழுந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்து இன்று மிக நல்ல பீலிங்.../

பரதேசி..காலைல எந்திருச்சு கோமயத்த குடிச்சிட்டு பில்டப்ப பாரு? :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nonsense

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

வாங்க வாங்க உங்களைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தேன், இனி உங்களுக்கு நாந்தான் பாசு. புரியுதா?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ஆமா புண்ணாக்கு எனக்கு புடிக்குது திங்கிறேன், பருத்தி கொட்டை புடிச்சா அதுவும் திம்பேன், போய்யா.........

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

அது உனக்கும் தெரிஞ்சு போச்சா....... ரைட்டு விடு..

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

கரெக்ட்டா நோட் பண்ணிட்டான்யா......

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

இடியட், ஒரு அதிகாரிகிட்டெ எப்படி பேசுறதுன்னு தெரியாது? ரேஸ்கல்...