இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Monday, May 28, 2012

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...
இன்று இரவு இங்கிருந்து கிளம்பி நாளை காலை சேலம் செல்கிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து திரும்புகிறேன். என்னை பார்க்க, பழக, சாப்பாடு வாங்கி தர, என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்க விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். என் நம்பர்:  1800-அவ்வ்வ்வ்-1100 (முழுக்க முழுக்க டோல் ஃப்ரீ இலவச சேவை).

சேலம் சித்த வைத்தியரிடம் ட்ரீட்மெண்ட் எடுப்பதற்காக அடிக்கடி அங்கே செல்வது வழக்கம். (இதுக்காக டிப்பார்ட்மெண்ட்ல பெசல் ஆர்டரே வாங்கி வச்சிருக்கேன்). ஒவ்வொரு முறையும் சேலம் செல்லும் போது வெறும் வைத்தியத்தோடு முடிந்துவிடும். ஆனா இந்த முறை கொஞ்சம் லேகியம் (மான் கொம்பு லேகியம்) வாங்கி வந்து அனைவருக்கும் விற்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் இருக்கிறேன். உங்கள் அனைவரின் மேலான ஆதரவை எதிர்நோக்கி உள்ளேன். எல்லாரும் வாங்கி பயன்படுத்தி சந்தோசமா இருக்கனும். என்ன நான் சொல்றது? என்னைய மாதிரி ஒரு உயர் அதிகாரி சொல்றதால எல்லாரும் நம்பி வாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.


இது சேலம் சித்த வைத்தியர் அவர்களுக்கு:
ஐய்யா, அழுதாலும் புரண்டாலும் கண்ணீர் விட்டு கதறினாலும் சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான். அதுனால நல்ல வெடக்கோழியா பாத்து புடிச்சு ரெடி பண்ணி வைக்கவும். தலைமறைவாக முயற்சி செய்தால் பின்னர் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என என் சார்பில் எச்சரிக்கை செய்கிறேன். என்னை வரவேற்று பேனர் எதுவும் கட்டவேண்டாம். ப்ளீஸ். அப்புறம் இந்த வாட்டி எனக்கு இரண்டு லாரி லோடு அளவுக்கு லேகியம் தேவைப்படுது. போனதடவை மாதிரி லேகியத்த மாத்தி கொடுத்துடாம கரெக்டா அந்த மான் கொம்பு லேகியத்த எடுத்து வைங்க. நான் வந்து அப்படியே எடுத்துகிறேன்.

மற்ற நண்பர்களுக்கு:
சேலம் சித்த வைத்தியரிடம் பெசல் லேகியம் வேண்டும் வாலிப வயோதிக நண்பர்கள் வரிசையாக வந்து பெயர் குடுக்கவும்.

ஹலோ.. வரிசையில வாங்க. ம்ம்.. வந்து பேரை சொல்லிட்டு பணத்த குடுங்க..

அட சண்டை போடாம வரிசையா வந்து லைன்ல நில்லுங்க பக்கிகளா...

ம்ம்.. அடுத்தது யாருப்பா.. சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல.... அங்க வைத்தியரு லேகியத்தோட வெயிட் பண்ணிட்டு இருப்பாரு, சொல்லிட்டு கரெக்டா போகல்லேன்னா கெட்ட வார்த்தைல திட்டுவாரு.......


லேகியத்த தின்னுட்டு ஸ்டெடியா வரனும்... என்ன?

16 comments:

எஸ்.கே said...

தவறு

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ஏன் லேகியம் வேலை செய்யலையா?

எஸ்.கே said...

கூட்டம் ஏன் வரவில்லை?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

வேற நல்ல லேகியம் கிடைச்சிருக்கும்

வைகை said...

இன்று இரவு இங்கிருந்து கிளம்பி நாளை காலை சேலம் செல்கிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து திரும்புகிறேன்/////

ஏன்? இங்க இருந்தே திரும்ப முடியாதா? முதுகு பிடிப்பா? :-)

வைகை said...

சேலம் சித்த வைத்தியரிடம் ட்ரீட்மெண்ட் எடுப்பதற்காக அடிக்கடி அங்கே செல்வது வழக்கம்.///

அவரு இன்னுமா உயிரோட இருக்காரு? :-)

வைகை said...

ஒவ்வொரு முறையும் சேலம் செல்லும் போது வெறும் வைத்தியத்தோடு முடிந்துவிடும்///

இந்தமுறை மொத்தமா முடிஞ்சிருச்சா? :-)

வைகை said...

ஐய்யா, அழுதாலும் புரண்டாலும் கண்ணீர் விட்டு கதறினாலும் சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான். அதுனால நல்ல வெடக்கோழியா பாத்து புடிச்சு ரெடி பண்ணி வைக்கவும்///

வெட கோழின்னா? குளிர்ல வெட வெடன்னு நடுங்கிகிட்டே இருக்குமா? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால இத்தன தடவ அங்க போயிட்டு வந்திருக்கியே, அந்தக் கருமாந்திர லேகியத்த நீயே தயார் பண்ணி தொலையலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////. என்னை பார்க்க, பழக, சாப்பாடு வாங்கி தர, என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்க விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். ////////

இதுக்கும் இவனே காசு கொடுத்து ஆள் செட் பண்ணி வெச்சிருப்பான் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சேலம் சித்த வைத்தியரிடம் ட்ரீட்மெண்ட் எடுப்பதற்காக அடிக்கடி அங்கே செல்வது வழக்கம்.//////

ஏன் பர்மனெண்டா அங்கேயே அட்மிட் ஆகிட வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இதுக்காக டிப்பார்ட்மெண்ட்ல பெசல் ஆர்டரே வாங்கி வச்சிருக்கேன்///////

வெளங்கிரும் அந்த டிப்பார்ட்டுமெண்ட்டு.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆனா இந்த முறை கொஞ்சம் லேகியம் (மான் கொம்பு லேகியம்) வாங்கி வந்து அனைவருக்கும் விற்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் இருக்கிறேன். ///////

அதெல்லாம் உனக்கே பத்தாதே, அதுக்கப்புறம் எப்படி விப்பே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அப்புறம் இந்த வாட்டி எனக்கு இரண்டு லாரி லோடு அளவுக்கு லேகியம் தேவைப்படுது. ////////

டேய் டேய் ஏண்டா, நமீதா கூட ஏதாச்சும் கூட்டணி அமைச்சிட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சேலம் சித்த வைத்தியரிடம் பெசல் லேகியம் வேண்டும் வாலிப வயோதிக நண்பர்கள் வரிசையாக வந்து பெயர் குடுக்கவும்./////////

போச்சுடா......... இனி ஊருக்குள்ள பாதிப்பேரு லேகியத்தோடதான் அலைவானுங்க............. போங்கடா எல்லாரும் தலைல ஒரு துண்ட போட்டுக்கிட்டு போய் லைன்ல நின்னு தொலைங்கடா........... என்னை ஆள விடுங்கடா...........

T.N.MURALIDHARAN said...

உங்கள் வலைபதிவை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் பார்த்து கருத்திடவும்
http://blogintamil.blogspot.in/2012/06/5.html