இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Wednesday, August 29, 2012

பதிவர் சந்திப்பு -மறைக்கப்படாத உண்மைகள்


பதிவர் சந்திப்பிற்கு நானும் போகனும்னு ஆரம்பத்துலயே ப்ளான் பண்ணிட்டேன்.  போனா எப்படியும் ஒருவேள சாப்பாடாவது கெடைக்கும்ல? நமக்கு வேற என்ன சார் வேணும்? டெய்லி நாமளே சமைச்சு, சாப்பிட்டு, பாத்திரம் கழுவி......... என்னத்த கண்டோம். அட்லீஸ்ட் ஒரு நாளாவது எந்த வேலையும் பார்க்காம நிம்மதியா நல்ல சாப்பாடு சாப்பிடலாம்ல!

இப்படி ஒரு நல்லெண்ணத்துல இருந்தப்போ பதிவர் சந்திப்பு அமைப்பாளர்கள்கிட்ட இருந்து திடீர்னு ஒரு அறிவிப்பு. நான் வெஜ் இல்லியாம், ஒன்லி வெஜ்தான் போடுவாங்களாம். அடடடா வட போச்சேன்னு நானும் கதிகலங்கி போயிட்டேன். பின்ன என்னங்க, வீட்லதான் சைவமா சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு பூரா செத்து போச்சு. வெளில போய் திருட்டுத்தனமா நான் வெஜ் சாப்பிட்டு வந்தாலும் எப்படியோ கண்டுபிடிச்சு தொரத்திடுறாங்க.  அப்புறம் நைட்டு பூரா ஆபீஸ்ல தங்க வேண்டியதா போய்டுது. இப்படி நான் வெஜ் சாப்பிட வழியே இல்லாம இருக்கைல வந்த ஒரு வாய்ப்பும் போச்சே?

இப்போ என்ன செய்யலாம், எப்படி இதை சமாளிக்கலாம்னு டெய்லி யோசிச்சேன், நின்னுக்கிட்டு யோசிச்சேன், ஓடிக்கிட்டு யோசிச்சேன், படுத்துக்கிட்டு யோசிச்சேன்.... பின்னே, வெஜ்ஜுன்றதுக்காக ஒரு ஓசி சாப்பாட்டை விட்டுட மு்டியுங்களா, நீங்களே சொல்லுங்க? அப்பதான் அந்த ப்ளான் சிக்குனுச்சு. உடனே பதிவர் சந்திப்புக்கு பேர் கொடுத்துட்டேன். அன்னில இருந்து வெறும் கஞ்சிதான். ஒரு கப் கஞ்சி, மூனு கப் தண்ணின்னு நல்லா ப்ராக்டீஸ் பண்ணி வயித்த ரெடி பண்ணிட்டேன்.

சந்திப்பு அன்னிக்கு வீட்ல காலைலயே சொல்லிட்டு கெளம்பிட்டேன். கெளம்பி நேரா அஞ்சப்பர் ஹோட்டல் போனேன். அங்க ஒரு பிரண்டை ஏற்கனவே வர சொல்லி இருந்தேன். ரெண்டு பேரும் நல்லா பிரியாணி, காடை ப்ரை, சிக்கன் 65, தந்தூரின்னு செம கட்டு. வழக்கம் போல பில் வந்ததும் நான் வாஷ் பேசின் பக்கமா ஒதுங்கினேன். பிரண்டு கேவலமா திட்டிக்கிட்டே பில்லுக்கு காசு கொடுத்தான். அப்புறம் அவன்கிட்ட வேற ஒரு வேலை இருக்குன்னு கெளம்பி நேரா பதிவர் சந்திப்பு நடக்கும் மண்டபத்துக்கு போயிட்டேன்.

அங்க போனா சாப்பாடு இன்னும் ஆரம்பிக்கல, அதனால பக்கத்து சந்துக்குள்ள இருந்த ஒரு பொட்டிக்கடைல சோடா வாங்கி அடிச்சிக்கிட்டே நோட்டம் விட்டுட்டு இருந்தேன். சாப்பாடு போட ஆரம்பிச்சுட்டாங்கன்னு தெரிஞ்சதும் அப்பதான் வர்ர மாதிரி வேக வேகமா உள்ள வந்தேன். எல்லாரும் வாங்க சாப்பிட போகலாம்னு கூப்பிட்டாங்க. நான் இல்ல வீட்ல சாப்பிட்டேன் வேணாம்னு சொல்லிட்டேன். அப்போ நான் ஏற்கனவே செட் பண்ணி வெச்சிருந்த மாதிரியே சில பதிவர்கள் வந்து பரவால்ல சும்மா எங்ககூட வந்து கம்பெனி கொடுங்கன்னு சொன்னாங்க.



அதுக்கு மேல விடுவேனா நான்? (விட்டா அப்புறம் உண்மையிலேயே சாப்பிட முடியாம போயிடுச்சுன்னா?) உடனே பந்தில உக்காந்து தூர்வாரிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சோடா குடிச்சிருந்தது நல்லா ஒர்க் அவுட் ஆகுனுச்சு. ஒரு ஏப்பத்த ரிலீஸ் பண்ணிட்டு செமயா பிரிச்சு மேய்ஞ்சுட்டேன். அந்த பக்கமா வந்த ஒருத்தர் வந்து பார்த்துட்டு இன்னும் நிறைய பேர் சாப்பிட வேண்டி இருக்கேனு கவலையா சொல்லிட்டு போனார். அதையெல்லாம் பார்த்தா முடியுமா?


போலி டிஸ்கி: நைட் சாப்பாட்டுக்கும் சேர்த்து நான் பார்சல் கட்டி கொண்டது யாருக்கும் தெரிய கூடாது என்று இங்கே நான் அதை பற்றி சொல்லவில்லை

ஒரிஜினல் டிஸ்கி: பார்சல் கொஞ்சம் அதிகமாவே கட்டிட்டு வந்துட்டதால இன்னும் அதுதான் ஒடிட்டு இருக்கு.

நன்றி:
போட்டோ கமெண்ட்ஸ்:  பன்னிக்குட்டி ராம்சாமி

13 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

//அப்போ நான் ஏற்கனவே செட் பண்ணி வெச்சிருந்த மாதிரியே சில பதிவர்கள் வந்து பரவால்ல சும்மா எங்ககூட வந்து கம்பெனி கொடுங்கன்னு சொன்னாங்க.//

இந்த பொழப்புக்கு....

TERROR-PANDIYAN(VAS) said...
This comment has been removed by the author.
கும்மாச்சி said...

அண்ணே வணக்கமுங்க, வாங்க, கலக்கிட்டீங்க அண்ணே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...
This comment has been removed by the author. //

super super super

எல் கே said...

ஹஹஹா

கோவை நேரம் said...

அட...உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...அப்புறம்..நீங்க பந்தில உட்கார்ந்த உடனே நிறைய பேருக்கு சாப்பாடு இல்லாமா போயிடுச்சாம்....

வைகை said...

அட்லீஸ்ட் ஒரு நாளாவது எந்த வேலையும் பார்க்காம நிம்மதியா நல்ல சாப்பாடு சாப்பிடலாம்ல!//


யோவ்! நீ என்னைக்கு வேலை பார்த்து சாப்ட்ட? டெய்லி பிச்சை எடுத்துதானே திங்கிற? :-)

வைகை said...

நான் வெஜ் இல்லியாம், ஒன்லி வெஜ்தான் போடுவாங்களாம். அடடடா வட போச்சேன்னு நானும் கதிகலங்கி போயிட்டேன்///

இதுல கதிகலங்க என்ன இருக்கு? ஓசில திங்கிற நாயி எத திண்ணா என்ன? :-)

வைகை said...

இப்போ என்ன செய்யலாம், எப்படி இதை சமாளிக்கலாம்னு டெய்லி யோசிச்சேன், நின்னுக்கிட்டு யோசிச்சேன், ஓடிக்கிட்டு யோசிச்சேன், படுத்துக்கிட்டு யோசிச்சேன்.... ///

சார், கக்கா போகும்போது யோசிக்கலையா? :-)

Unknown said...

சொந்தமாக சமைத்து சாப்பிடும் அனைவருக்கும் சமர்பிககப்பட்ட சுவையான உண்மை நிழ்ச்சி . நன்றி

வெளங்காதவன்™ said...

ஹா ஹா ஹா.....


ஒரிஜினல் தம்பி வந்து "அயம் டீசன்ட்"னு கமண்ட் போடலியே!!!

வாட் ஹெப்பன்?

MARI The Great said...

ஹா ஹா ஹா, சரவெடி! :D

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Im decent :)