இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Monday, April 9, 2012

நூத்துக்கு நூறு


இதெல்லாம் எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி... யாருகிட்ட......?

நேத்து ஏட்டு கருப்சாமி மற்றும் கோயிந்து சாமி கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். ரெண்டு பேரும் நூறாவது பதிவு என்ன போட போறீங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க. நான் நூறாவது பதிவு எப்ப போடுறது அப்டின்னு கேட்டேன். அவங்க சொன்ன விஷயத்தை கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

ஆமாங்க நூறாவது பதிவு போடுறதுக்கு முன்னால 99-வது பதிவை கண்டிப்பா போட்டிருக்கனுமாம்.(என்ன ஒரு கண்டுபிடிப்பு). எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரமிச்சிடுச்சு. ஏன்னா நான் 5 பதிவுதான் போட்டிருந்தேன். அப்டின்னா எப்படி நூறாவது பதிவ போடுறதுன்னு நானும் உயர் அதிகாரிகள் கிட்ட ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தேன் (இதுக்கு பேசாம வழக்கம் போல படுத்து தூங்கிருக்கலாம்).

நூறாவது பதிவுன்னா வித்தியாசமா இருக்கனுமாம்(அப்டின்னா ஹிந்தில எழுதிடவா?). ஒரு கருத்து இருக்கனுமாம்(பதிவ படிச்சிட்டு உயிரோட இருந்தா பாக்கலாம்).

கடைசில ஒரு வழியா நேத்து 99-வது மொக்கை பதிவை போடுற மாதிரி கனவு கண்டேன். அப்புறம் நூறுதான?(நான் கரெக்டாதான பேசுறேன்). சரி நூறாவதா என்ன பதிவு போடலாம். அதை உங்க சாய்ஸ்-கே விட்டுடுறேன்(நீ பதிவே எழுத வேண்டாம் அப்டின்னு யாராவது கமெண்ட் போட்டீங்க நம்ம ஒரிஜினல் சிரிப்பு போலீச திரும்ப பதிவு எழுத கூட்டிட்டு வந்திருவேன், ஜாக்கிரதை)

நேத்து 99-வது பதிவு போடுற மாதிரி கனவு காணும் போது 1121 Followers இருந்தாங்க. ஆனா இன்னிக்கு 21 Followers தான் இருக்காங்க. மீதி பேரக் காணோம். இதுக்கு ஏதோ உள்நாட்டு சதிதான் காரணம்ன்னு நினைக்கிறேன். என்ன பண்ணியாவது அந்த சதியை கண்டு  பிடிக்கிறேன். போலீஸ்னா சும்மாவா!!!

என்னோட இந்த நூறாவது பதிவை முன்னிட்டு எல்லோரும் அவங்க அவங்க வீட்டு பக்கத்துல உள்ள ஸ்வீட் கடைக்கு போய் உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்டை வாங்கி சாபிடுங்க. அதுக்கு காசு வேணும்னா இந்த அட்ரஸ்ல காண்டக்ட் பண்ணுங்க:

சிரிப்பு போலீஸ் (உண்மையிலேயே ஒரிஜினல்)
சென்னை மெயின் ரோடு,
சென்னை குறுக்கு சந்து,
டாஸ்மாக் மேல் மாடியில்,
சென்னை

நன்றி: ஒரிஜினல் நூத்துக்கு நூறு

.

45 comments:

வைகை said...

நேத்து ஏட்டு கருப்சாமி மற்றும் கோயிந்து சாமி கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். //

த்தூ.. என்னமோ ராணுவ ரகசியம் பேசுன மாதிரி? :-)

வைகை said...

ரெண்டு பேரும் நூறாவது பதிவு என்ன போட போறீங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க//

வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு இது தேவையா? :-)

வைகை said...

நான் நூறாவது பதிவு எப்ப போடுறது அப்டின்னு கேட்டேன். அவங்க சொன்ன விஷயத்தை கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.//


உன் மூஞ்சிய கண்ணாடில பார்த்த மாதிரின்னு சொல்லு? :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

தம்பி அதிகாரிகள்னா அப்படித்தான், நாங்கள்லாம் கொட்டாவிவிட்டாவே அது பெரிய ராணுவ ரகசியம் மாதிரி... அண்டர்ஸ்டேண்ட்..?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

உனக்கும் தெரிஞ்சி போச்சா....? இது நமக்குள்ள இருக்கட்டும்

வைகை said...

ஆமாங்க நூறாவது பதிவு போடுறதுக்கு முன்னால 99-வது பதிவை கண்டிப்பா போட்டிருக்கனுமாம்//

டேய்ய்... அதுக்கு மொதல்ல பதிவே போட்ருக்கணும்.... நீ போட்டதெல்லாம் ஒரு பதிவா? :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ஆமா அது எப்படி உனக்கு தெரியும்?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

பதிவு போட நான் என்ன ரெஜிஸ்தர் ஆபீஸ்லயா வேல செய்யறேன்..?

வைகை said...

நீ மொதல்ல அந்த லேடி கான்ஸ்டபிள் மேல இருந்து கைய எடு :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

எங்கிட்டு போனாலும் கேட்டு போடுறாய்ங்களே.....

வைகை said...

அப்டின்னா எப்படி நூறாவது பதிவ போடுறதுன்னு நானும் உயர் அதிகாரிகள் கிட்ட ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தேன் //

ங்கொய்யால... கால் அமுக்கி விட்டத எவ்வளவு நாசூக்கா சொல்றான் பாரு? :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

நல்லவேள கால் அமுக்குனத மட்டும்தான் நோட் பண்ணி இருக்கானுக...

வைகை said...

நூறாவது பதிவுன்னா வித்தியாசமா இருக்கனுமாம்//

வித்தியாசம்னா? நீ வேணா... எருமையின் ஏக்கங்கள்னு டெரர் பத்தி பதிவு எழுதேன் :-)

வைகை said...

யோவ்..அதென்ன கொரில்லா டேசனா? :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

டெரரா யாரு அது? நானே பெரிய டெரர்.. என்னவிடவா ஒருத்தன் இருக்கான், வந்து ஒத்தைக்கு ஒத்தயா மோதி பார்க்க சொல்லு..

செல்வா said...

சரி., எனக்கு தெரியாது.. நான் படிக்காம போயிடறேன்..

வைகை said...

அப்ப பஸ்ல போக ட்ரைவிங் தெரியனுமா? போங்க சார்..காமெடி பண்ணிக்கிட்டு :-)

செல்வா said...

உங்கள பார்த்தா பயக்கனுமா ?

வைகை said...

(நீ பதிவே எழுத வேண்டாம் அப்டின்னு யாராவது கமெண்ட் போட்டீங்க நம்ம ஒரிஜினல் சிரிப்பு போலீச திரும்ப பதிவு எழுத கூட்டிட்டு வந்திருவேன், ஜாக்கிரதை)//


இப்பிடியெல்லாம் பயமுறுத்தினா.. என்னமாதிரி சின்னப் பசங்க எப்பிடி இங்க வருவாங்க? :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

விட்டா கிறுக்கனாக்கிடுவாயங்க போல..?

வைகை said...

நேத்து 99-வது பதிவு போடுற மாதிரி கனவு காணும் போது 1121 Followers இருந்தாங்க. ஆனா இன்னிக்கு 21 Followers தான் இருக்காங்க. மீதி பேரக் காணோம். //

நாளைக்கு பாரு..இவங்களும் இருக்க மாட்டாங்க :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

இல்ல நான் சின்னப்பசஙக்ள பயப்படுத்த மாட்டேன், கேடிப்பசங்கல மட்டும்தான் புடிப்பேன்

செல்வா said...

// விட்டா கிறுக்கனாக்கிடுவாயங்க போல..?//

அப்படீன்னா நீங்க இப்ப நல்லாத்தான் இருக்கீங்களா?

வைகை said...

அதுக்கு காசு வேணும்னா இந்த அட்ரஸ்ல காண்டக்ட் பண்ணுங்க://


அட.. சுருக்கமா கலாக்கா வீடுன்னா கழுதைக்கும் தெரியுமே? :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

அந்த பயம் இருக்கனும்..

செல்வா said...

அவுங்கள புடிச்சு அவுங்க கிட்ட மாமூல் கேப்பீங்களா ?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

அப்படித்தான் நம்ம டேசன் ஏட்டு கோயிந்துசாமி சொன்னாரு..

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

இல்ல மாமுல் கொடுப்பேன்..

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

அது கழுதைக்கு மட்டும்தானே தெரியும்?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ஏன் ஒரிஜினல் சிரிப்பு போலீசு இங்க வர்ரேன்னு சொல்லிட்டாரா?

மாணவன் said...

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. :-)

Madhavan Srinivasagopalan said...

யாரிந்த சீப்பான(சிப்பு ) போலீசு.. ?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

உங்க பள்ளிக்கொட ஆசிரியரா? அவர் இங்க ஏன் வந்தாரு?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

நோ என்கிட்ட சீப்பு இல்ல

Madhavan Srinivasagopalan said...

ஓஹோ.. நீங்க வழக்க மண்டையனா ?
போட்டோல முடி இருக்குதே.. அது பளைய போட்டோவா..?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ஷட்டப் இடியட் ஆஃப் தி நான்சென்ஸ் ஆஃப் தி ட்ரங்கன் மங்க்............ சீப்பு இல்லேன்னா வழுக்கன்னு முடிவு பண்ணிடறதா? நான் சீப்பு கடன் வாங்கி சீவுவேன். சே... கொஞ்சம் அசந்தா மொட்டையே போட்ருவாய்ங்க போல?

Madhavan Srinivasagopalan said...

// நான் சீப்பு கடன் வாங்கி சீவுவேன். //

சீப்புக்கூட லோன்ல கெடைக்குதா ?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

பஸ்ல போக ட்ரைவிங் தெரிய வேண்டியதில்ல, ஆனா சில்லற வேணும் தம்பி....

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ஆமா அதுதான் சீப்பு லோனு.

rajamelaiyur said...

வைகை அண்ணனுக்கு அடிகடி கண்ணாடி பாத்து பயந்த அனுபவம் இருக்கு

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

அப்போ நீங்க இதுவர கண்ணாடியே பாக்கல போல?

Madhavan Srinivasagopalan said...

எலேய் சின்ராசு.. காதுல விழுந்திச்சா..
வா வா.. நாமளும் சீக்கிரமா போயி சீப்பு சீப்பா.. லோனு வாங்கியாருவோம்...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

சீப்பு சீப்பா வாழப்பழம்தான் கிடைக்கும்

Sen22 said...

பதிவ விட உங்க Reply கமெண்ட்ஸ் அருமை... :))))

நாய் நக்ஸ் said...

அப்பாடா...நான் தப்பிச்சேன்...என் பேரு வரலை...
தேங்க்ஸ் போலிசு....
அப்பாலிக்கா கடை பக்கம் வா....
[கழுவுன தண்ணிய குடிக்க வழக்கமா வர மாடு வரலை]