இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Tuesday, April 17, 2012

இந்தியாவில் தமிழன் தலைநிமிர வழி என்ன?

பொதுமக்கள் அனைவருக்கும் இந்த ஏட்டு ஏகாம்பரத்தோட (என்கவுண்ட்டர் பெசலிஸ்ட்) பணிவான வணக்கம். ஏதோ காசு கொடுத்து போஸ்டிங் வாங்கி அப்பப்ப, அங்கங்க அஞ்சு பத்துன்னு வாங்குனாலும் எனக்கும் மக்கள் முன்னேற்றத்துல அக்கறை இருக்குன்னு இன்னிக்கு நிரூபிக்க போறேன்.அதாவது சார், இன்னிக்கு நாட்ல என்ன பிரச்சனை இருக்குன்னா, அந்த பக்கம் காவேரி, இந்த பக்கம் முல்லை பெரியார், இன்னொரு பக்கம் பாலாறு அடுத்த பக்கம் ஈழம். இப்படி திரும்புன பக்கமெல்லாம் தமிழனுக்கு அடி, ஒருபய மதிக்க மாட்டேங்கிறான். அதுக்கு என்ன காரணம் அதை எப்படி சரி பண்றதுன்னு இன்னிக்கு ஒரு தீர்வோட வந்திருக்கேன். அதை கேட்டுட்டு நீங்கள்லாம் அப்படியே ஷாக் ஆகிடுவீங்கன்னா பாருங்களேன்.

நாட்டுல அதிகாரம் வாய்ந்த ஆள் யார்? பிரதமர்தானே? அப்போ அவர் ஆபீஸ்தானே அதிகாரம் வாய்ந்த இடம்? இங்கதான் நீங்க கவனமா இருக்கனும். பிரதமர் ஆபீஸ் எங்க இருக்கு? டெல்லிலதானே? டெல்லி எங்க இருக்கு? இன்னும் டீட்டெயிலா பார்ப்போமா? ஒரு இண்டியா மேப்ப எடுத்து ஓப்பன் பண்ணி வெச்சுக்குங்க சார். அப்புறம் ஒரு அடிஸ்கேல் ஒண்ணு எடுத்துட்டு நான் சொல்றத கவனமா கேளுங்க.

தமிழ்நாட்டோட செண்டர்ல ஸ்கேலோட ஒரு பக்கத்த வெச்சிக்கிட்டு, அப்படியே டெல்லி வரைக்கும் அளந்து பாருங்க. அடேங்கப்பா எவ்வளது தூரம்? இவ்வளவு தூரத்துல அதிகார மையம் இருந்தா நம்மளை எவன் மதிப்பான்? இப்போ புரியுதா சார் என்ன பிரச்சனைன்னு? இனி இதை எப்படி சரி பண்றதுன்னு பார்ப்போம்.

வெயிட் வெயிட்... நீங்கள்லாம் அந்தப்படத்துல வந்த மாதிரி தமிழ்நாட்ட அப்படியே தூக்கி டெல்லி பக்கத்துல வைக்க சொல்ல போறேன்னு தானே நினைக்கிறீங்க? தப்பு, ஒருத்தன் எத்தன தடவ சார் தப்பு பண்ணுவான்? அப்போ ஏதோ சின்ன வயசு, அவசரத்துல தப்பா ஐடியா சொல்லிட்டேன். இனி அப்படி நடக்காது சார். இவ்ளோ சின்ன டெல்லிய தூக்கிட்டு வந்து தமிழ்நாட்டுல வைக்கிறத விட்டுட்டு, இம்மாம்பெரிய தமிழ்நாட்ட தூக்கி டெல்லி பக்கத்துல வைக்க சொல்வேனா?

அதுனால டெல்லிய அப்படியே ரிமூவ் பண்ணி தமிழ்நாட்டுல நல்லா செண்ட்ட்ரான எடமா பாத்து வெச்சிவிடுங்க. வேல முடிஞ்சது. (அப்பிடியே டெல்லிய நகட்டிட்டு வரும்போது நமக்கு பிரச்சனையா இருக்க கர்னாடகாவ லேசா அப்பிடி கடலுக்குள்ள தள்ளி விட்டோம்னா...  அந்த பிராப்ளமும் சால்வ்ட்... எப்பிடி  என் ஐடியா...?) இப்படியே எல்லாரும் அவங்கவங்க மேப்ப எடுத்து மாத்தி முடிச்சிட்டீங்கன்னா, இனி டோட்டல் அதிகாரம் நம்ம கைக்கு வந்திடும்ல? 

பார்த்தீங்களா ஒரு உயர் அதிகாரி, எவ்ளோ பொறுமையா உக்கார்ந்து ஒரு பெரிய தீர்வு ஒன்னு சொல்லி இருக்கேன், அதுனால என்னுடைய இந்த தீர்வு குறித்து ஆன்றோர்கள், சான்றோர்கள், பெரியோர்கள், சபையோர்கள், முன்னோர்கள் அனைவரும் கருத்து கூறுமாறு கேட்டுகொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

31 comments:

வைகை said...

சார்.. அப்பிடியே உலகத்தோட அதிகார மையத்த இங்க கொண்டு வர்றதுக்கும் ஒரு ஐடியா சொல்லிட்டு போங்க...

வைகை said...

ஏதோ காசு கொடுத்து போஸ்டிங் வாங்கி அப்பப்ப, அங்கங்க அஞ்சு பத்துன்னு வாங்குனாலும் //

வாங்குறது பிச்சை...அதுக்கு இந்த பில்டப்பா? :-)

வைகை said...

நாட்ல என்ன பிரச்சனை இருக்குன்னா, அந்த பக்கம் காவேரி//

இது யாரு உன் பக்கத்து வீட்டு ஆண்டியா? :-)

வைகை said...

அதை கேட்டுட்டு நீங்கள்லாம் அப்படியே ஷாக் ஆகிடுவீங்கன்னா பாருங்களேன்.//

போயாங்..ஏற்கனவே இங்க ஷாக் கொடுக்க கூட கரண்டு இல்லாமதான் இருக்கோம் :-)

வைகை said...

நாட்டுல அதிகாரம் வாய்ந்த ஆள் யார்? பிரதமர்தானே?//

போய்யா அங்கிட்டு..காமெடி பண்ணாம..

Nagarajachozhan MA said...

மச்சி இங்கே எப்படி தனியா கமென்ட் போடறது? ரிப்ளை மட்டும் தான் இருக்கு?

Nagarajachozhan MA said...

யோவ் போலீசு, அப்புறம்?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

என்னப்பா தம்பி..நைட்டு அடிச்சா குவாட்டர் இன்னும் தெளியலையா?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ம்ம்ம்.. அப்பிடி கேளுங்க தம்பி... உங்க அப்ரோச் எனக்கு ரொம்ம்ம்ப புடிச்சிருக்கு

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

தம்பி... நாட்ல இப்ப இதான் காஸ்ட்லி தொழில்..போங்க தம்பி..போங்க...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

எப்பிடி கண்டுபிடிச்சான் பயபுள்ள? ராஜதந்திரம் போதவில்லையோ?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

கரண்டு இல்லைனா தந்தி கம்பத்துல தொங்கு..இங்க ஏன் சொல்ற? கரண்டு இல்லையாம்...கரண்டு...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

யோவ்.. ஒரு அதிகாரி எவ்வளவு சீரியஸா பேசிகிட்டு இருக்கேன்? காமெடிங்ர?

Madhavan Srinivasagopalan said...

// போய்யா அங்கிட்டு..காமெடி பண்ணாம.. //

காதுல விழுந்திச்சா.. போய்யா.. போ.. போ.. போ.

தினேஷ்குமார் said...

ஆபிஸர் எங்க கம்பனி கடல் கடந்து தொலைவில இருக்கு அப்புடியே அதையும் நம்ம ஊர் பக்கம் கொண்டு வர்றதுக்கு வழி பண்ணுங்க

தினேஷ்குமார் said...

வாஸ்த்தவம் தான் எந்த கோவில்ல உக்காரப்போறீங்க ஆபிஸர்

Sen22 said...

//ஏந்தம்பி எங்க போனாலும் இப்படி அடிக்கிறாய்ங்க?//

சார் இந்த மாதிரி ஐடியாவெல்லாம் கொடுத்தீங்கன்னா நீங்க எங்கேயும் போக வேண்டியது இல்ல.. எல்லோரும் வீட்டுக்கே வந்து அடிப்பாங்க ஜாக்கிரதை.. :))))))

தினேஷ்குமார் said...

கனக்ட்டாஸ்கோப் வச்சு தான் பங்கு கண்டுபிடிச்சிருப்பார் ....

ப.செல்வக்குமார் said...

இப்போ நாம டெல்லிய அங்க இருந்து தூக்கிட்டு வந்து தமிழ்நாட்டுக்குப் பக்கத்துல வைக்குறோம்ல.. அப்போ டெல்லி இருந்த இடத்துல கேப் விழும்ல ? அத எப்படி அடைக்கிறது ?

தினேஷ்குமார் said...

அடுத்த ரோல் என்ன ஆபிஸர்

தினேஷ்குமார் said...

குவாட்டர் அடிச்சா தெளியும் குவாட்டர்ல குளிச்சா......?

தினேஷ்குமார் said...

எம்.சீல் வச்சு அடைக்கலாமா ....

தினேஷ்குமார் said...

எல்லாம் ஒரு நீதியரசன் முளைக்கட்டும்னு தான் சொல்லியிருப்பார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய் என்னடா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட நன்னாரிப்பயலே.........

வெளங்காதவன்™ said...

?????

????
????
???

#Deal a, No deal ah?

விஸ்வநாத் said...

// இந்தியாவில் தமிழன் தலைநிமிர வழி என்ன? //

சொந்தக் காசுல MOOV ointment வாங்கி கழுத்துல தடவிக்க வேண்டியது தானே;
இந்தியா என்ன உலகத்துல எந்த மூலைக்கு போனாலு தலை நிமிரலா;

பட்டிகாட்டான் Jey said...

பன்னாடை..பரதேசி...பொறம்போக்கு... போக்கத்தவனே...நாயே...தத்தாரி தறுதலை...வெண்ணை...வெங்காயம்... கர்ர்ர்ர்ர்ர்ர் த்தூஊஊஊஊஊஊஊ

பட்டிகாட்டான் Jey said...

இந்த பதிவை இன்னிக்கி பேஸ்புக்ல ஷேர் பண்ண பன்னிக்குட்டிக்கும் ஒரு......


கர்ர்ர்ர் த்த்தூஊஊஊஊஊஊஊஊஊ

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

/////பட்டிகாட்டான் Jey said...
பன்னாடை..பரதேசி...பொறம்போக்கு... போக்கத்தவனே...நாயே...தத்தாரி தறுதலை...வெண்ணை...வெங்காயம்... கர்ர்ர்ர்ர்ர்ர் த்தூஊஊஊஊஊஊஊ
////

தம்பி ஒரு கடமைதவறாத காவல்துறை அதிகாரிய பார்த்து இப்படியெல்லாம் பேசப்படாது் உங்களுக்கு தமிழன் தலை நிமிர்வது புடிக்கலைனு நினக்கிறேன். ரைட் விடு

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

பட்டிகாட்டான் Jey said...
இந்த பதிவை இன்னிக்கி பேஸ்புக்ல ஷேர் பண்ண பன்னிக்குட்டிக்கும் ஒரு......


கர்ர்ர்ர் த்த்தூஊஊஊஊஊஊஊஊஊ
/////

பேச்புக்கா அப்படின்னா என்ன?