இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Monday, February 6, 2012

பொங்கல்: மலரும் நினைவுகள்

இந்த பொங்கலும் கடந்த பொங்கலைப் போலவே பொங்கலாகவே முடிந்தது...! இந்த வருடமாவது பொங்கல் தீபாவளியாக மாறும் என்று எதிர்பார்த்து என் பாஸிடம்  போனஸ்  கேட்டு செருப்படி வாங்கியதுதான் மிச்சம். இருந்தாலும் இந்தப் பொங்கலும் கபாலீஸ்வரர்   கோவிலில் ஓசியிலையே முடிந்தது. பொங்கல்  அன்று காலை கபாலீஸ்வரர்  கோவிலில் சகபிச்சைக்காரர்களுடன் பிச்ச எடுத்துவிட்டு  மதியம் வடபழனியில் பிச்ச எடுக்க சென்றேன். மாலை ஆறு மணிக்கு எக்மோரில் பிச்ச எடுப்பதாக பிளான். சரியாக ஆறு மணிக்கு பவர் ஸ்டார் கெட்டப்பில் துபாய் பிச்சைகாரன் டெரரும், சிங்கப்பூர் பிச்சைகாரன் ஜெயந்தும்  வந்து சேர்ந்தனர்.

முதல் போணி பதிவர்  பன்னிகுட்டி கையால்தான் வாங்க வேண்டும் என்று டெரர் தனிப்பட்ட முறையில் பன்னிகுட்டி காலில் விழுந்து கெஞ்சியிருந்ததால் பன்னிகுட்டி  நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டாக ஆறு மணி மீட்டிங்குக்கு ஐந்து மணிக்கே அங்கு வந்து காத்திருந்தார். முதலில்  ஒரு டாஸ்மாக்கில்  போய் பீர் ஆர்டர் செய்தோம். ஜெயந்த் பீர் வாங்கி வரும் அழகை பார்த்ததும் கன நேரத்தில் எனக்கு ஒரு கவிதை உதித்தது.... அந்த  கவிதையை கேட்டு நீங்கள் அடம் பிடிப்பீர்கள் என்பதற்காக...


ஒரு பீர் பீப்பாயே
பீரை...
சுமந்து வருகிறதே? 
அடடே.... !!!!!!!!!!!!

பிறகு அனைவரும் தாஜ் ஹோட்டல்  போயி அங்கு சாப்பிட்டு காசு கொடுக்க வில்லை என்றால் செருப்பால் அடிப்பார்கள் என்பதால் வழக்கம் போல மாரியம்மன் கோவில் கூளோடு எங்கள்  இரவு உணவை முடித்தோம். 11.30 மணிக்கு கூழ் ஊத்தியவன்  அண்டாவுல தீந்திருச்சுடா அயோக்கிய ராஸ்கல்களா அப்டின்னு திட்டியதும்தான் அந்த கோவிலை விட்டு கிளம்பினோம்.

மறுநாள் நான்,ஜெயந்த்,டெரர்  மூணு பேரும் ஒரு மாறுதலுக்காக MGM வாசலில் பிச்சை எடுக்கலாம்  என்று பிளான் செய்து கிளம்பினோம். அங்கு வந்தால் எங்கள் மூணு பேருக்கும் திரும்பவும் பிச்சை போட வேண்டி வரும் என பயந்து உடம்பு சரியில்லை என்னால் வர முடியாது என எஸ்கேப்பு ஆகிவிட்டார் பதிவர் பன்னிகுட்டி . ஆனால் அதே நேரம் அவர் பத்து ப்ளாக்குகளில் பிளாக்குக்கு பத்து கமெண்ட் வீதம் போட்டு கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தது. ஒரு வழியாக MGM ல் பிச்சை எடுக்கும் படலம் இனிதே முடிந்தது.

அன்று மாலை MGM-ல் இருந்து மெரீனா பீச்சுக்கு பிச்சை எடுக்க வரும்போது மீன்பாடி வண்டியில் நான் பிடித்திருந்த கம்பி நம்பர் 4B (Middle) . 4A (Window) ல  அனேகமாக எங்கள் எங்கள் சங்கத்தை சேர்ந்த பெண் ஒருத்தி வந்து உக்காந்துச்சு. நல்ல வடபழனி முருகன் கோவிலில் கொடுக்கும் பொங்கல் நிறம்,  கூவம்  நதியின்  மணம்  அவள்  கூந்தலில் இருந்து  மணம் வீசியது, அரப்பாடி வண்டியோடு போட்டிபோடும் சைசில் இருந்தாள், நல்லா நிறைய ஜன்னல் வைத்த சேலை.. கதவே வைத்த ஜாக்கெட்... சரி இந்த பிகருகிட்ட (????)  கடலைய போட்டுக்கிட்டே இரண்டு  மணி நேர பயணத்தை முடிச்சிடலாம்னு என் மனதில் யோசித்துக்கொண்டிருக்கும்போதே இந்த ஜெயந்த் நாதாரியும் அந்த பொண்ண படிக்க வைக்கிறேன்னு மடக்க பார்த்தான்.. நல்ல வேளை... ஜெயந்த் முழுபாடி வண்டி சைசுக்கு இருந்ததால அது அவன கண்டுக்கவே இல்லை.... என்னையே வச்ச கண்ணு  வாங்காமல் பார்த்துகிட்டே இருந்தாள்! 

அதனால நானும் தைரியத்த வர வழைத்து... அந்த பிகருகிட்ட மெதுவா நகர்ந்து போனேன்.... 
"ஹேய்... ஏன் அப்பிடி குறுகுறுன்னு என்னையவே பார்க்கிற? நாலு பேரு பார்த்தா என்னைய என்ன நினைப்பாங்க? எதுவா  இருந்தாலும் அப்பா  அம்மாவ  வீட்ல  வந்து பேச சொல்லு... ஆனா அதுக்கு முன்னாடி என்கிட்டே உன்னைய எது கவர்ந்து  இழுத்துச்சு? அத சொல்லு... என் மங்களகரமான மஞ்சள் படிந்த பற்களா? இல்லை எண்ணுவதற்கு தோதாக நீட்டிக்கொண்டிருக்கும் எலும்புகளா? அல்லது... கழுதைக்கு போட்டியான  என் குரலா? கூவத்துக்கு போட்டியான என் வாசமா? எதுடா செல்லம் உன்னைய  கவர்ந்தது.... சொல்லுடா.... சொல்லு..ம்ம்ம்......

 நான் இவ்ளோ கேட்டும் அந்த பிகர் பார்வையின் கோணத்தை மாற்றாமல்.... வெறித்தபடியே இருந்தாள்... நான் மீண்டும் மீண்டும் கேட்கவும் அந்த கருத்த.. ச்சீ..பெருத்த குயில் வாய் திறந்தது மெதுவாக.... ஆனா ஆனா அது சொன்ன ஒத்த சொல்லு எனக்கு பொங்கலில் கிடக்கும் கல்லை கடித்தது போல ஒரு வலியை ஏற்படுத்தியது. அப்படியே எந்திரிச்சு மீன்பாடி வண்டி டிரைவரிடம்... எஸ்சூஸ் மீ இங்க நான் ரோட்ல உருண்டு அழனும். அதுக்கு வண்டிய நிப்பாட்ட முடியுமான்னு கேட்டேன். அந்த மீன்பாடி வண்டி டிரைவரோ இம்சை அரசன் பாபுவின் போட்டோவை பார்த்தது போல் மூஞ்சியை கோணலாக்கி ஒரு முறை முறைத்தான். நானும் வேறு வழியில்லாமல் அங்கேயே உக்கார்ந்து அழுதேன்.

அந்த பிகர் சொன்ன ஒத்தை வார்த்தை...
அந்த ஒத்த வார்த்தை
.
.
.
.
.
.
.
போங்க அண்ணா.. நான் இவ்ளோ நேரம் உங்களுக்கு பின்னாடி உக்காந்துருந்த டெரர் அத்தான மட்டும்தானே பார்த்துகிட்டு இருந்தேன்!

36 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படா ஒரு வழியா சிரிப்புபோலிஸ் திரும்பவும் ப்ளாக் ஓபன் பண்ணி ..எழுத ஆரம்பிச்சுட்டாரு ...

இம்சைஅரசன் பாபு.. said...

//உங்கள் மீது ஒருவன் செருப்பை எறிந்தால், அவன் இன்னொரு செருப்பையும் பிடுங்கிக் கொண்டு ஓடுங்கள், ங்கொய்யால வெறுங்கால்ல நடந்து போகட்டும்....!
//
ஹ ..ஹா .. பூ எப்போ செருப்பா ஆகிடுச்சு போல ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் சிப்பு பழைய ப்ளாக்கு என்னாச்சுய்யா?

கருடன் said...

//முதல் போணி பதிவர் பன்னிகுட்டி கையால்தான் வாங்க வேண்டும் என்று டெரர் தனிப்பட்ட முறையில் பன்னிகுட்டி காலில் விழுந்து கெஞ்சியிருந்ததால் //

பிச்சைகாரன்கிட்ட பிச்சையா.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS)Feb 5, 2012 10:00 PM
//முதல் போணி பதிவர் பன்னிகுட்டி கையால்தான் வாங்க வேண்டும் என்று டெரர் தனிப்பட்ட முறையில் பன்னிகுட்டி காலில் விழுந்து கெஞ்சியிருந்ததால் //

பிச்சைகாரன்கிட்ட பிச்சையா.. :)////

பிச்சைக்காரர் சங்கத்தலைவர்ல, அதான் நாயம் கேட்குறாரு.....

இம்சைஅரசன் பாபு.. said...

//சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) //
உனக்கு பொன்னு பார்தவிடனே நினைச்சேன் .... நீ கேவலமா போடவேன்னு ..
ஆனாலும் உனக்கு தைரியம் ஜாச்த்திடா ...ரொம்ப நல்லவன்னு இவ்வளோ நாளும் வச்சுகிட்டு இப்ப இப்படி மாத்தி இருக்க பார்த்தியா உன் நேர்மைய நான் பாராட்டுறேன்

கருடன் said...

// நான் இவ்ளோ நேரம் உங்களுக்கு பின்னாடி உக்காந்துருந்த டெரர் அத்தான //

டெரர் செத்தான்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பவர் ஸ்டார் கெட்டப்பில் துபாய் பிச்சைகாரன் டெரரும்,/////

பவர்ஸ்டார் தகதகதகன்னு தங்க கலர்ல மின்னுவாரே? அவர போய் இந்தப் பன்னாட கூட கம்பேர் பண்ணி இருக்கானே?

இம்சைஅரசன் பாபு.. said...

டேய் ப்ளாக் உலகத்தில ரமேஷ் ..ரமேஷ் ன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே அவனை எங்கே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு..Feb 5, 2012 10:17 PM
டேய் ப்ளாக் உலகத்தில ரமேஷ் ..ரமேஷ் ன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே அவனை எங்கே/////

பப்ளிஷ் பண்ணிட்டு பம்மிட்டானா?

கருடன் said...

//பவர்ஸ்டார் தகதகதகன்னு தங்க கலர்ல மின்னுவாரே? அவர போய் இந்தப் பன்னாட கூட கம்பேர் பண்ணி இருக்கானே?//

நான் ஒரு கருப்பு வைரம்.. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யார் இந்த கருப்பு ஆடு

இம்சைஅரசன் பாபு.. said...

பப்ளிஷ் பண்ணிட்டு பம்மிட்டானா//

ஆமா ம(அ )ம்மி ய பார்த்தச்சுல இனி பம்ம தானே ..வேணும் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 5, 2012 10:20 PM
யார் இந்த கருப்பு ஆடு/////

இப்படிக் கேட்டா எப்படி? ஊருக்குள்ள கருப்பா ஒருத்தன் ரெண்டு பேராடா இருக்கான்?

Anonymous said...

மீன்பாடி வண்டிலையும் ஜன்னலோர சீட்டு. அதுல நம்பர் வேற..!

NaSo said...

அண்ணன் ரமேஷ் அவர்கள் வால்க! வால்க!!!

மாணவன் said...

ஹிஹி.... வாழ்த்துகள்!

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி! :-)

வைகை said...

போங்க அண்ணா.. நான் இவ்ளோ நேரம் உங்களுக்கு பின்னாடி உக்காந்துருந்த டெரர் அத்தான மட்டும்தானே பார்த்துகிட்டு இருந்தேன்!//


தக்காளி.. செத்தாண்டா சேகரு :-))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமிFeb 5, 2012 10:22 PM
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)Feb 5, 2012 10:20 PM
யார் இந்த கருப்பு ஆடு/////

இப்படிக் கேட்டா எப்படி? ஊருக்குள்ள கருப்பா ஒருத்தன் ரெண்டு பேராடா இருக்கான்?//

விடு மச்சி... எல்லாரும் நம்ம ரெண்டு பேரு மாதிரி வெள்ளையா இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியுமா? :-)

வைகை said...

சிவகுமார் !Feb 5, 2012 10:57 PM
மீன்பாடி வண்டிலையும் ஜன்னலோர சீட்டு. அதுல நம்பர் வேற..!///

அண்ணன் சைக்கிள்ள உக்காந்தா கூட நம்பர் பார்த்துதான் சீட்ல உக்காருவாரு :-))

எஸ்.கே said...

இது உண்மையா என சந்தேகம் எழுகின்றது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கேFeb 6, 2012 02:24 AM
இது உண்மையா என சந்தேகம் எழுகின்றது!////

போலீஸ் வந்துதான் விம் போட்டு வெளக்கனும்...

NaSo said...

எங்கே வெளக்கனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MAFeb 6, 2012 08:54 AM
எங்கே வெளக்கனும்?///

பல்லுல....

மாணவன் said...

25

நாய் நக்ஸ் said...

என்னாது இது...???

Madhavan Srinivasagopalan said...

What nonsense.. you are talking..?
--- Vadivelu..

Unknown said...

என்னய்யா இந்த பதிவு ஒரு தினுசா இருக்கு !!! ஒரு எழவும் புரிய மாட்டேங்குது...!ஒரு வேலை கலாய்க்கிறானோ..ரமேஷ :)

Unknown said...

இம்சைஅரசன் பாபு..Feb 5, 2012 10:07 PM
//சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) //
உனக்கு பொன்னு பார்தவிடனே நினைச்சேன் .... நீ கேவலமா போடவேன்னு ..
ஆனாலும் உனக்கு தைரியம் ஜாச்த்திடா ...ரொம்ப நல்லவன்னு இவ்வளோ நாளும் வச்சுகிட்டு இப்ப இப்படி மாத்தி இருக்க பார்த்தியா உன் நேர்மைய நான் பாராட்டுறேன் ////////

இந்த கமெண்ட் அ படிக்கும் போது கண்ணு கலங்குது ..,எந்த தமிழ் வாத்தியார் தான் நினைவுக்கு வரார் :)))

Unknown said...

போலிஸ் ,
நீ வரணும் ,திரும்ப பழைய சிரிப்பு போலீசா வரணும் ,இந்த டெர்ரர் பாண்டியனோட மோதணும் ,என் குரவலைய பிடிக்கணும் ,வரணும் வருவே ,வரவைப்பேன்

இப்படிக்கி
டெர்ரர் பாண்டியன்

Unknown said...

////// TERROR-PANDIYAN(VAS)Feb 5, 2012 10:12 PM
// நான் இவ்ளோ நேரம் உங்களுக்கு பின்னாடி உக்காந்துருந்த டெரர் அத்தான //

டெரர் செத்தான்... :) ////////

கவலை படாதீங்க டெர்ரர் பாண்டியன் ..,கருங்குஷ்டம்ன்றது குணபடுதுற வியாதி தான் மனச மட்டும் தளர விட்ராதீங்க

Unknown said...

கண்களில் காண்டும் ,கக்கத்தில் ஆற்றாமையும் வைத்து கொண்டு இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

/////UnknownFeb 7, 2012 04:56 AM
போலிஸ் ,
நீ வரணும் ,திரும்ப பழைய சிரிப்பு போலீசா வரணும் ,இந்த டெர்ரர் பாண்டியனோட மோதணும் ,என் குரவலைய பிடிக்கணும் ,வரணும் வருவே ,வரவைப்பேன்

இப்படிக்கி
டெர்ரர் பாண்டியன்/////

பழைய போலீசெல்லாம் இனி வரமாட்டார், இனி நான்தான்..... ஐயாம் தி ஒன்லி சிப்பு போலீஸ்..!

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

/////UnknownFeb 7, 2012 05:02 AM
கண்களில் காண்டும் ,கக்கத்தில் ஆற்றாமையும் வைத்து கொண்டு இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது////

ரேஸ்கல்... ஒரு அதிகாரிகிட்ட எப்படி பேசனும்னு தெரியாது....?

Unknown said...

//////ரேஸ்கல்... ஒரு அதிகாரிகிட்ட எப்படி பேசனும்னு தெரியாது....?////////

ok பேசுறேன் பேசுறன்

Unknown said...

மெல்லிதாய்த்துவங்கும் தட்டாபூச்சியின் உணவுவேட்கயின் அடிவயிட்ட்று போர்வாள் போன்ற உயிர்குடிக்கும்போதிற்றன் குறுவாளுயர்த்திக் கொக்கரித்து ஊதலின் உட்புகுந்துவரும் கனாக் கீற்றுக்களைக் கையுயர்த்தி நிற்கும் பன்னிக்குட்டியே அதிகாரவர்கத்தின் தொழிலாள விரோத அதிகாரியே நான் எப்படி பேசவேண்டும் என்று அதிகாரத்தின் போதையில் பிதற்றுபவரே எப்படி இந்த வின(வு )வினை கேடீர்கள் :))